கோலாலம்பூரில் நடந்த சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜாலான் துன் ரசாக்கில் அமெரிக்கத் தூதகரம் வீற்றுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போலீஸ் துறையின் பொறுப்பாகும். அந்த வகையில் அமெரிக்கத் தூதகரம் வீற்று இருக்கும் பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.








