அலோர் ஸ்டார், டிசம்பர்.22-
அலோர் ஸ்டார், ஜாலான் அம்பாங் பே பகுதியில் இன்று கார் ஒன்று ஆற்றில் விழுந்து மூழ்கியதில் 28 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 28 வயதுடைய ஊய் சியா ஹுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அலோர் ஸ்டார், ஜாலான் அங்கேரிக் பகுதியைச் சேர்ந்தவர்.
இன்று காலை சுமார் 10.37 மணியளவில், ஜாலான் அம்பாங் பே சாலையில் சென்று கொண்டிருந்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி ஆற்றில் விழுந்தது.
கார் ஆற்றில் விழுந்த போது சிறிது நேரம் மிதந்ததாகவும், பின்னர் பலத்த நீரோட்டம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு, மீட்புப் படையினர் சிறப்பு உபகரணங்கள் மூலம் காரை மேலே உயர்த்தி, காருக்குள் இறந்த நிலையில் காணப்பட்ட அந்த அந்த ஆடவரை மீட்டனர் என்று அலோர் ஸ்டார் தீயணைப்பு, மீட்பு நிலைய அதிகாரி இஸ்மாயில் முகமட் ஸையின் தெரிவித்தார்.








