புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.14-
மாணவர்களின் ஒழுக்கத்தையும் நன்னடத்தையையும் வலுப்படுத்துவதற்காக மலாக்கா அரசு முன் வைத்த 10 முக்கியத் தீர்மானங்களை முழுமையாக ஆய்வு செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானங்களில், மிரட்டல் போன்ற தவறான நடத்தைகளில் ஈடுபடும் மாணவர்களுக்குக் கல்வியுதவியை நிறுத்துதல், பெற்றோரின் அனுமதியுடன் விவேகமான முறையில் பிரம்படி வழங்குவது போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளும் அடங்கும்.
இந்த ஒவ்வொரு தீர்மானமும் தற்போதுள்ள கல்வி கொள்கைகளும் ஒட்டுமொத்த தாக்கங்கள் மீது நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவாகப் பரிசீலிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதற்கிடையில், பாலர் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் கல்வி சவால்களைச் சமாளிக்கவும், பெற்றோரும் சமூகமும் பள்ளியுடன் முழுமையாக ஈடுபடுவதை உறுதிச் செய்யும் வகையில் PAKAT எனப்படும் விரிவான மழலையர் பள்ளி அணுகல் திட்டம் என்ற புதிய சமூகக் கூட்டு முயற்சி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.








