பழைய வாகனங்களுக்கு ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் கொள்கையை மலேசியா அமல்படுத்தாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்ற போதிலும் மலேசியர்கள், மின்னியல் வாகனங்களை அல்லது பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அதிகளவில் ஊக்குவித்து வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
சுய வாகனத்தை சார்ந்து இருக்கும் மலேசியர்களின் அத்தியாவசியத் தேவை, நாட்டின் சமூகவியல் பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பழைய வாகனங்களுக்கு ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் கொள்கையை அமல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று அந்தோணி லோக் விளக்கினார்.








