பெண் வழக்கறிஞர் ஒருவரை ரகசியமாக வீடியோ எடுத்த 62 வயது ஓய்வுபெற்ற முதியவர் எஸ். ஆனந்தன் என்பவருக்கு செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 7 நாட்கள் சிறை மற்றும் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி ரவாங்கில் உள்ள உணவகத்தில், 29 வயது பெண் வழக்கறிஞரின் ஆடையின் உட்புறத்தைத் தனது அலைபேசியில் படம் பிடித்ததை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதைச் சுட்டிக்காட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஹபீஸ் ஐமான் பத்ரிஷாம், முதியவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வழக்கை விசாரித்த மாஜிஜிஸ்திரேட் மஹ்மூதா அப்துல் லத்தீப், சிறைத் தண்டனையுடன் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாதச் சிறையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.








