மஞ்சோங், செப்டம்பர்.27-
பேரா, மஞ்சோங், பந்தாய் ரெமிஸ் அருகில் ஜாலான் ஹண்ட்லி கம்போங் சுங்கை பத்துவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நிகழ்ந்தது.
33 வயது ஹூ சுயேட் யீ என்ற நபரும், அவரின் பத்து வயது மகன் சான் ஜூன் ஜீயும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.








