Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கமாண்டோ வீரர் கவலைக்கிடம் - குடும்பத்தினர் நீதி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

கமாண்டோ வீரர் கவலைக்கிடம் - குடும்பத்தினர் நீதி கோரிக்கை

Share:

இராணுவ முகாமில் அளிக்கப்பட்ட தண்டனைக்குப் பிறகு கமாண்டோ வீரர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான அப்துல் ஹமீத் தாலிப் என்ற அந்த வீரர், முகத்தில் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர், செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வருகிறார்.

குளியலறையில் தவறி விழுந்ததால் தான் இந்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படும் விளக்கத்தை அவரது தாயார் மறுத்துள்ளார். தனது மகனின் இந்த நிலைக்கு முறையற்ற தண்டனைகளே காரணம் என குற்றம் சாட்டும் குடும்பத்தினர், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இவ்விவகாரத்தில் வழக்கறிஞர் என். சுரேந்திரன் தலைமையிலான 'Lawyers for Liberty' அமைப்பு தலையிட்டுள்ளதோடு, இந்தச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை