Jul 31, 2026
Thisaigal NewsYouTube
காசாவில் சுகாதார வசதிகளுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

காசாவில் சுகாதார வசதிகளுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு

Share:

தெற்கு காசாவில் உள்ள மருத்துவக் கிடங்கில் இருந்து சுகாதாரப் பொருட்களை 24 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திற்கு உத்தரவிட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகளை மலேசியாவின் சுகாதார அமைச்சு கடுமையாகக் கண்டிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலை உலகமே கண்டிக்கிறது.

இஸ்ரேலின் இந்த முடிவால் பாலஸ்தீன மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வுரிமையையும் சீர்குலைப்பதோடு மட்டுமன்றி பாலஸ்தீனத்தில் அமைதிக்கான தீர்வை எட்டுவதற்கான சூழலையும் சிக்கலாக்குகிறது.

உலக அமைதிக்காக பாலஸ்தீனத்துக்கான நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரையும் தாம் கேட்டுக்கொள்வதாக, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா கேட்டுக் கொண்டார்.

Related News

காசாவில் சுகாதார வசதிகளுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்... | Thisaigal News