பெட்டாலிங் ஜெயா, ஜூலை.31-
மலேசியாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள வரியை மறுபரிசீலனை செய்வதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அதே வேளையில் நாளை ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மலேசியாவிற்கு விதிக்கப்படவிருந்த வரி மீதான அறிவிப்பை ஒத்தி வைப்பதற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று காலை 6.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக டொனால்ட் டிரம்ப்புடன் நடத்திய உரையாடலில் இவ்விவகாரங்களுக்கும் அவர் ஒப்புதல் அளித்து இருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
நாளை ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மலேசியாவின் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இன்று காலையில் அமெரிக்க அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியதாகவும், இதன் தொடர்பில் நாளை புதிய வரி விகிதம் குறித்து அமெரிக்கா அதிபர் அறிவிப்பார் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








