கோலாலம்பூர், டிசம்பர்.01-
தாம் வகித்து வரும் அமைச்சர் பதவி நாளை டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஸாஃப்ருல், ஓர் அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் கடந்த 6 ஆண்டு காலமாக தமக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்.பி.க்களும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் இதுவே தமது கடைசி வருகை என்று ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.








