Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தொட்டியில் விழுந்த தொழிற்சாலை ஊழியர்
தற்போதைய செய்திகள்

தொட்டியில் விழுந்த தொழிற்சாலை ஊழியர்

Share:

கூலிம், கூலிம் ஹை டெக் தொழிற்சாலையில் 3.65 மீட்டர் ஆழமுள்ள தொட்டியில் விழுந்ததில் அந்நிய தொழிலாளர் ஒருவருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டது.

நேற்று இரவு 8.58 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக கூலிம் ஹை டெக், தீயணைப்பு தலைவர் அஸ்மிர் ஹாசன் தெரிவித்தார்.

மூத்த தீயணைப்பு அதிகாரி மட் புவாட் கசாலி மற்றும் அவரின் தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் உட்பட கூலிம் தீயணைப்பு, மீட்புபடை நிலையத்திலிருந்து இரண்டு பேர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றதாக அஸ்மிர் ஹாசன் கூறினார்.

சம்பவ இடத்தில் 25 வயதுடைய வங்காளதேச பணியாளர் ஒருவர் கால் மற்றும் தோள்பட்டை முறிவு ஏற்பட்டு தொட்டியில் விழுந்து இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட அந்நபர் மருத்துவ பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அஸ்மிர் ஹாசன் நேற்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்