Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியா நீக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியா நீக்கம்

கோலாலம்பூர், நவ. 15-


அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியா நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அந்த நாணய கண்காணிப்புப்பட்டியலில் புதிய வரவாக தென் கொரியாவை அது சேர்த்துக்கொண்டுள்ளது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள கருவூலத்துறையின் அரையாண்டு அறிக்கையில் இவ்விவரம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் பெரிய வர்த்தக உபரிகளைக் கொண்ட நாடுகளை நோக்கி, அதன் பார்வை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, அந்த நாடுகள் போட்டித்தன்மையை பெறுவதற்காக அந்நியச் செலாவணி சந்தைகளில் அமெரிக்காவின் தீவிர தலையீடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தென்கொரியாவை தவிர சீனா, ஜப்பான், தைவான், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியிலில் இடம் பெற்றுள்ளன.

இதில் ஏற்கனவே அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்த மலேசியாவை அது அகற்றியுள்ளது.

வலிமையான, நிலையான மற்றும் சமநிலையான உலகளாவிய வளர்ச்சியை ஆதரிக்கும் மற்றும் அதிகபடியான வெளிப்புற ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் தங்களின் முக்கிய வர்த்தக சகாக்களாகும் என்று அமெரிக்காவின் கருவூலம் வாதிடுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →