Oct 5, 2026
Thisaigal NewsYouTube

அம்பாங்கில் வீட்டிற்குப் பின்னால் கேட்ட புலியின் உறுமலால் மக்கள் அச்சம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அம்பாங்கில் வீட்டிற்குப் பின்னால் கேட்ட புலியின் உறுமலால் மக்கள் அச்சம்!

அம்பாங், அக்டோபர்.13-

அம்பாங், யுகே பெர்டானாவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில், புலியின் உறுமல் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாயினர்.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி, புலியின் உறுமல் குறித்து அப்பகுதி மக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து, தேசிய வனவிலங்குத்துறை அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தி வருவதாக அதன் இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இதுவரை புலியின் கழிவுகளோ, கால் தடங்களோ கிடைக்கவில்லை என்று கூறிய அப்துல் காடீர், சில மரங்களில் உள்ள நகக்கீறல்களின் அடிப்படையில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →