Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடன்: 62 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்
தற்போதைய செய்திகள்

மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடன்: 62 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

Share:

கோலாலம்பூரில் கடன் கொடுத்த கும்பல் ஒன்றால், 62 வயது மூதாட்டி ஒருவர் உணவகத்திற்குள் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவச் செலவுகளுக்காக, திருமதி வாங் என்ற அந்தப் பெண் சில நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களுக்குச் சொந்தமான உணவகத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு சென்றவுடன் உணவகத்தின் ஷட்டர்கள் மூடப்பட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த பிறகும், மார்பில் எட்டி உதைத்துக் கொடூரம் இழைத்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலை, அங்கிருந்த அவரது கணவரால் தடுக்க முடியாமல் அடியாட்கள் கட்டிப்போட்டுள்ளனர்.

காயங்களால் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண், பின்னர் கணவரால் மீட்கப்பட்டார். தற்பொழுது மலேசிய மனிதாபிமான அமைப்பின் உதவியுடன் அவர் போலீஸ் துறையில் புகார் அளித்துள்ளார். 'ஒரு முதியவள் என்றும் பாராமல் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்களே' என அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். போலீஸ் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை