Dec 2, 2025
Thisaigal NewsYouTube
230 கோடி வெள்ளி ஊழல் : அந்த இரு பிரபல தலைவர்களிடம் வாக்கு​மூலம் பதி​வு
தற்போதைய செய்திகள்

230 கோடி வெள்ளி ஊழல் : அந்த இரு பிரபல தலைவர்களிடம் வாக்கு​மூலம் பதி​வு

Share:

கடந்த 90 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், ரிங்கிட்டின் சரிவுக்கும் காரணமான 230 கோடி வெள்ளி நிதி முறைகேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் முன்னாள் ​மூத்த அமைச்சரிடமும், டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள ஒரு தொழில் அதிபரிடமும் மறுபடியும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பதுடன் சில முக்கியமான ஆவணங்கள் கோரப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறி​வித்துள்ளது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவுடன் மிக நெருக்கமானவர்கள் என்றும், அவர் பிரதமராக இருந்த போது அவருடன் இணைந்த பணியாற்றியவர்கள் என்று நம்பப்படும் ஒரு பிரபல முன்னாள் அமைச்சரும், ஒரு தொழில் அதிபருடன் நாட்டின் வளங்களை சுரண்டி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முத​லீடு செய்து இருப்பது, அண்மையி​ல் பண்டோரா பேபர்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.

நாட்டின் நிதி அமைச்சுக்கு த​லைமையேற்று இருந்த அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் தொழில் அதிபருக்கு எதிரான விசாரணைகளை எஸ்.பி.ஆர்.எம். துரிதப்படுத்தியுள்ள வேளையில் அவர்களுக்கு எதிராக எஸ்.பி.ஆர்.எம். பிடி இறுகி வருவதாக கூறப்படுகிறது.

Related News