Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சீன நாட்டுப்பிரஜை கருகி மாண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீன நாட்டுப்பிரஜை கருகி மாண்டார்

மீரி, நவ.5-


மீரி, ஜாலான் கிராண்ட் பார்க் கில் உள்ள ஒரு மாடியைக்கொண்ட இரட்டை வீட்டில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கருகி மாண்டார்.

இது குறித்து, அதிகாலை 3.06 மணியளவில் அவசர அழைப்பைப்பெற்ற தீயணைப்புப்படையினர், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டில் பரவிய தீயை முழுமையாக ஒரு காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தப்பின்னர் வீட்டை சோதனையிட்ட போது அந்தப் பெண் கருகி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சரவா மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா பேச்சாளர் தெரிவித்தார்.

13 வயது யுவான் ரோஹான் என்ற சீனநாட்டு இளம் பெண்ணே இதில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

இத்தீச்சம்பவத்தில் அந்த இரட்டை வீடு, 70 விழுக்காடு அழிந்தது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →