Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மன்னிப்பு கேட்டது சிங்கப்பூர் அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

மன்னிப்பு கேட்டது சிங்கப்பூர் அரசாங்கம்

Share:

எம்.எச். 370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தை ஒரு கேலிப்பொருளாக சித்தரித்து இருக்கும் சிங்கப்பூர் கலைஞர் ஜோஸ்லின் சியா வை மலேசிய வலைப்பதிவாளர்கள் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளது.

அதே வேளையில், மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் செயலையும் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்காது என்றும், அந்தக் கலைஞரின் வார்த்தைகள் அல்லது செயல்கள் எந்த வகையிலும் நாட்டின் கருத்துக்களை பிரதிபலிக்காது என்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் ஆணையர் வனு கோப்பால மேனன் தெரிவித்தார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான நட்புறவுக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அந்தப் பெண் கலைஞரின் செயல் இருந்ததனால், அவர் இனி சிங்கப்பூர் குடியுரிமை கொண்டிருக்க மாட்டார் என்று வனு கோப்பால மேனன் குறிப்பிட்டார்.

அத்துடன் சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் மேம்பாடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அந்த பெண் கலைஞர், 29 வினாடிகள் ஓடக்கூடிய டிக் டோக் கில் மிக ஏளனமாக பேசியிருப்பதையும் மலேசியர்கள் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு