சிப்பாங், நவம்பர்.01-
சிலாங்கூர், சிப்பாங், சாலாக் திங்கியில் சுமார் 6 ஹெக்டர் காட்டுப் பகுதியில் பரவிய தீக்கு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காரணம் என தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலையில் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர், தீயை இன்று காலை சுமார் 5 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புத்துறையின் தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.








