Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

டிச. 29-

Kedah Darul Aman (KDA) FC கால்பந்து விளையாட்டாளர்கள் ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களில் ஒரு விளையாட்டாளரான Muhammad Irfan Zakaria இன் மனைவி என நம்பப்படும் மாது ஒருவர் இந்தத் தகவலை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். கிளப்பில் நிதி இல்லை என்றால், கிளப்பை மூடிவிடலாம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது புதிய பிரச்சனை அல்ல. இதற்கு முன்பும் விளையாட்டாளர்கள் ஊதிய பிரச்சனை காரணமாக பயிற்சிகளையும் போட்டிகளையும் புறக்கணித்துள்ளனர். இந்த நிதி நெருக்கடி அணிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிதிப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், KDA FC சூப்பர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. சமீபத்தில் PENANG FC ஐ வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேலும் MFL Challenge கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அணி வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளப் நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ரசிகர்களும் வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்