ஈப்போ, செப்டம்பர்.01-
சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவைக் கட்டியணைக்க முயற்சித்தப் பெண்ணை 3 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தப் பெண், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
நேற்று ஈப்போவில் பேரா மாநில அளவில் நடைபெற்ற நாட்டின் 68 ஆவது சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்வில் பேரா மாநில கீதம் பாடப்பட்டுக் கொண்டிருந்த போது, பிரமுகர் நின்றிருந்த முதல் வரிசையில் ஊடுருவிய 41 வயது பெண், பேரா சுல்தானைக் கட்டியணைக்க முயற்சித்த போது, மெய்க்காவலர்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.








