Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் அவசியமாகும்
தற்போதைய செய்திகள்

நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் அவசியமாகும்

Share:

நாளை திங்கட்கிழமை, தொடங்க விருக்கும் 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான இரண்டாவது அமர்வு கூட்டத்தொடரில் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் அவசியமாகும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim நினைவுறுத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறித்த விளக்கமளிப்பும் அறிவுறுத்தல்களையும் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
பிரதமர் Anwar கூறியிருந்த நினைவுறுத்தலை பகிர்ந்து கொண்டு பேசுகையில் வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan இதை
தெரிவித்தார்.

நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்பாக இன்று, Putrajaya, Seri Perdana - வில் முன் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் அவசியம் என்பதுடன் எவரும் இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்க வேண்டாம் என்று Mohamad Hasan வலியுறுத்தினார்.

15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான இரண்டாம் அமர்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 18 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்