Sep 28, 2026
Thisaigal NewsYouTube
துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்
தற்போதைய செய்திகள்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

Share:

மறைந்த துன் டாக்டர் ஹஸ்மா அலிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களும் இன்று தங்களது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸீல் தெரிவித்துள்ளார்.

தேசிய இருதயக் கழகத்தில் இன்று காலை 100 வயதில் துன் டாக்டர் ஹஸ்மா காலமானதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தாயாகவும் மருத்துவராகவும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி தெரிவித்தார்.

தெ மைன்ஸ் ரெசிடென்ஸில் உள்ள குடும்ப இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் பேசிய டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி, துன் டாக்டர் ஹஸ்மாவின் சேவைகள் பலரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

தான் 12 வயதாக இருந்தபோது, பள்ளியில் நண்பர்களுடன் நடத்திய நாடகத்தை துன் டாக்டர் ஹஸ்மா பார்வையிட்டது தமது ஆரம்பகால நினைவுகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News