ஈப்போ, அக்டோபர்.02-
பத்துகேவ்ஸ் காட்டுப் பகுதியில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தனது நண்பரைத் துப்பாக்கினால் சுட்டு மரணம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 4 நபர்கள், வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா ? என்பது குறித்து போலீசார் ஆராய்ந்து வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் தெரிவித்தார்.
மரணமடைந்த தங்கள் நண்பரின் சடலத்தை பத்துகேவ்ஸிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் பேரா, பாகான் செராய் அருகில் செமங்கோல், கம்போங் செலாமாட் என்ற கிராமத்தில் சாலையோரத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்றது தொடர்பில் அந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் ஒருவர், உயிரிழந்த நபரின் மைத்துனன் ஆவார். நால்வரில் மூவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








