கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலன் - னில் உள்ள அலுவல கட்டிடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் வாடிக்கையாளர்களின் சேவை அதிகாரிகளாக பணியாற்றும் 13 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.15 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 4 வளாக மேலாளர்கள், 37 வாடிக்கையாளர்கள், 33 பணிப்புரிபவர்கள் உட்பட 13 வெளிநாட்டு பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டன.
இதில் மேலும் 26 க்கும் 60 க்கும் உட்பட்ட மேலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா அறிவித்தார்.
முறையான ஆவணங்கள் இல்லாத குற்றத்திற்காக அந்த வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நூர் டெல்ஹான் மேலும் குறிப்பிட்டார்.








