Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ​தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு மாநில​ங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு கூடுதலான நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பேராவில் ​​மூன்று மாவட்டங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் நிவாரண மைங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹிலிர் பேராக், கிரியான், கிந்தா ஆகிய ​மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

கெடாவில் வெள்ளத்தினால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வெள்ள நிர்வாக மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

Related News