சனிக்கிழமை நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரண்மனைகளில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றைய இரவு சில தரப்பினர் மாநில அரண்மனைகளில் வெளி வளாகத்தில் குவியக்கூடிய சாத்தியம் இருப்பதால் முன்கூட்டியே பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.
இதேபோன்று மாநில அரசாங்க கட்டடட்ஙகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அரண்மனை வளாகத்தின் வெளியே மக்கள் குழுமியிருப்பது, இடையூறு விளைவிப்பது போன்ற செயல்கள் அனுமதிக்க இயலாது என்று ஐ.ஜி.பி. தெளிவுபடுத்தினார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


