புற்றாஜெயா, செப்டம்பர்.11-
நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் வாகன ஓட்டுநர்களும், பயணிகளும் இருக்கை வார்ப்பட்டை அணிவது கட்டாயமாக்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அறிவித்துள்ளது.
இது குறித்து ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறுகையில், தற்போது இருக்கை வார்ப்பட்டை குறித்து ‘Klik Sebelum Gerak’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அதன் பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில், இருக்கை வார்ப்பட்டை அணிவது குறித்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








