திரைப்பட வெளியீடு மற்றும் இந்திய நாட்டு நடிகர், நடிகைகளை மலேசியாவிற்கு அழைத்து வந்த கலைநிகழ்ச்சிகளை படைப்பது போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரபல தொழில் அதிபர் டத்தோ மாலிக் டஸ்திகிர் இன்று புதன்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி. ஆர். எம் மினால் கைது செய்யப்பட்டுள்ள டத்தோ மாலிக், இன்று மதியம் 12 மணி வரையில் அவர் விடுவிக்கப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
அந்த தொழில் அதிபரை ஜாமீனில் விடுவிப்பதற்கான முயற்சிகள், அவரின் வர்த்தக சகாக்கள், வழக்கறிஞர்கள் மூலம் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி. ஆர். எம் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டத்தோ மாலிக்கிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு ஒரு நாள் மட்டுமே நீதிமன்றத்தின் தடுப்புக்காவல் அனுமதி கிடைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மாலிக் சிரிம்ஸ் கோர்போரேஸ்ஹன் சென்டிரியான் பெர்ஹட்/ மாலிக் மஜு சென்டிரியான் பெர்ஹட் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான 42 வயது டத்தோ மாலிக், நேற்று அதிகாலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதப் பண மாற்றம் பயங்கரவாத நிதி அளிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் டத்தோ மாலிக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து மேலும் சில தொழில் அதிபர்களை எஸ்.பி. ஆர். எம் கைது செய்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக சொத்து குவிப்பு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இதுரையில் 50 கோடி வெள்ளி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய செய்திகள்
எஸ்.பி. ஆர். எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக் இன்று ஜாமீனில் விடுவிக்கப்படுவார்
Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


