Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து – கம்போடியா பேச்சு வார்த்தை வியாழக்கிழமை முடிவடையும்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா பேச்சு வார்த்தை வியாழக்கிழமை முடிவடையும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-

தாய்லாந்தும் கம்போடியாவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக நடத்தி வரும் பேச்சு வார்த்தை வரும் வியாழக்கிழமை நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளில் இராணுவத் தலைவர்கள் குறிப்பாக தளபதிகள், மலேசிய இராணுவ தளபதி ஒருங்கிணைத்து இருக்கும் சந்திப்புக்கு ஏற்ப கோலாலம்பூரில் தங்கள் பேச்சு வார்த்தையை நடத்துவார்கள் என்று தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவு பெறுவதற்கு முன்னதாக சில முக்கியமான அம்சங்கள் குறித்து தளபதிகள் முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆசியான் கூட்டமைப்பின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News