கோலாலம்பூர், செப்டம்பர்.27-
இன்று செப்டம்பர் 27 முதல், புடி மடானி ரோன் 95 திட்டத்தின் கீழ், சுமார் 3 லட்சம் இராணுவத்தினரும், காவல்துறையினரும் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுகள் வீதம் மானிய விலை பெட்ரோலைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நடப்புச் சந்தை விலையில், லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 காசாக இருக்கும் ரோன் 95 இரக பெட்றோலைக் கட்டம் கட்டமாக மக்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக இன்று முதல் இராணுவத்தினரும், காவல்துறையினரும் மானிய விலையில் பெறத் தொடங்கியுள்ளனர்.
அடுத்தக் கட்டமாக வரும் செப்டம்பர் 28 முதல் B40 பிரிவைச் சேர்ந்த மக்களும், செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் சுமார் 16 மில்லியன் மலேசியர்கள் இம்மானிய விலைத் திட்டத்தில் பயனடையவுள்ளனர்.








