Sep 28, 2026
Thisaigal NewsYouTube
20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

நாட்டில் கொள்கலன்கள் அல்லது பீப்பாய்களில் 20 லிட்டருக்கு மேல் பெட்ரோல் அல்லது டீசல் வாங்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இனி சிறப்பு அனுமதிப் பத்திரம் பெறுவது கட்டாயம் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறுகையில், "மானிய விலையிலான எரிபொருட்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அவசர காலங்களைத் தவிர்த்து, வாகனத்தின் எரிபொருள் தொட்டியைத் தவிர மற்ற தேவைகளுக்காக 20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்குவோர், 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

போக்லிஃப்ட் இயக்குநர்கள், விவசாயம், மீன்பிடித் தொழில், உணவுத் தொழில் மற்றும் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்கள் இந்த சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்