Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பல்நோக்கு பேரங்காடியில் பெண்ணிடம் சில்மிஷம்: நபர் கைது
தற்போதைய செய்திகள்

பல்நோக்கு பேரங்காடியில் பெண்ணிடம் சில்மிஷம்: நபர் கைது

Share:

பேரங்காடியில் பணியாற்றும் 25 வயது பெண் ஊழியர் முன்னிலையில், 55 வயது நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராக், கெரிக் பகுதியில் உள்ள பல்நோக்கு பேரங்காடியில் நேற்று பிற்பகல் மதியம் 3:33 மணியளவில் நடந்த இந்தச் செயலைத் தனது அலைபேசியில் படம்பிடித்த அந்தப் பெண், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த நபர் வேலையில்லாதவர் என்றும், அவர் இதற்கு முன் மனநல சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது அவர் மீது அநாகரீகமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News