Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 1 முதல் மைவிசா 2.0 ஐ அறிமுகப்படுத்துகிறது குடிநுழைவு இலாகா
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் மைவிசா 2.0 ஐ அறிமுகப்படுத்துகிறது குடிநுழைவு இலாகா

Share:

புத்ராஜெயா, ஜூலை.21-

மலேசிய குடிநுழைவுத்துறை மைவிசா 2.0 முறையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வருகிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மடானி அரசாங்கத்தின் பொதுச் சேவைகள் வழங்கப்படும் முறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக குடிநுழைவுத் துறையில் மைவிசா 2.0 முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மைவிசா முறையின் அடுத்த மைல் கல்லாக மைவிசா 2.0 அமைந்துள்ளது என்று சைஃபுடின் விளக்கினார்.

இந்தப் புதிய முறையானது துரிதமாக, பாதுகாப்பான மற்றும் திறன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் அனுபவத்தை வழங்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் விசா தளமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களுக்குப் பொதுச் சேவை வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் அனைத்துலக பார்வையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

இன்று புத்ராஜெயா தலைமையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய குடிநுழைவுத்துறை தினம் கொண்டாட்டத்துடன் இணைந்து மைவிசா 2.0 முறையை அறிமுகப்படுத்தி, உரையாற்றுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.

Related News