Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள் – கல்வி அமைப்புகளுக்கு அன்வார் வலியுறுத்து!
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள் – கல்வி அமைப்புகளுக்கு அன்வார் வலியுறுத்து!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.13-

நாட்டின் கல்வி அமைப்புகள் அதிகம் அறிவை வளர்ப்பதில் தான் கவனம் செலுத்துகின்றன. ஆனால் அவை ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய காலமாக நாடெங்கிலும் பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடி வதை குற்றங்கள், மாணவர்கள் மத்தியில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் குறைவாக உள்ளதை பிரதிபலிக்கின்றன என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்கா பள்ளியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய அன்வார், தான் பங்கேற்கும் பள்ளி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், தொடர்ந்து பகடி வதை குறித்துப் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையி., மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நன்மதிப்புகளையும் கற்றுக் கொடுக்காதது ஆசிரியர்களின் தவறு மட்டுமல்ல, பெற்றோர் மற்றும் கல்வி அமைப்பின் தவறும் கூட என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Related News