கோலாலம்பூர், செப்டம்பர்.22-
சீனாவில் கல்வி கற்று வரும் மலேசிய மாணவர்கள், சீன சமூகத்தினரின் கடின உழைப்பு மனப்பான்மை மற்றும் பயனுள்ள கற்றல் முறைகளில் கற்றுத் தேர்ந்து, அந்த அனுபவங்களை மலேசியாவிற்குக் கொண்டு வர வேண்டுமென துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தற்போதைய வளர்ச்சிகளுக்கும், சாதனைகளுக்கும் பின்னால் பல ஆண்டு கால அர்ப்பணிப்பும், தொடர் முயற்சிகளும் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
சீனாவில் ஏறக்குறைய 6000 மலேசிய மாணவர்கள் கல்வி கற்று வருவதாகக் குறிப்பிட்ட ஃபாடில்லா யூசோஃப், பெய்ஜிங்கில் மட்டும் 1600 மாணவர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் மலேசியக் கலாச்சாரத்தையும், தேச உணர்வையும் பெருமையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








