Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெண்மை நாட்டின் முன்னேற்றத்திற்கான அச்சாணி - அனைத்துலக மகளிர் நாளில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் புகழாரம்
தற்போதைய செய்திகள்

பெண்மை நாட்டின் முன்னேற்றத்திற்கான அச்சாணி - அனைத்துலக மகளிர் நாளில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் புகழாரம்

Share:

ஷா ஆலாம், மார்ச்.08-

அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பெண்கள் குடும்பத்தின் பலமாகவும், சமுதாயத்தின் தூண்களாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய இயங்கு சக்தியாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்வின் போராட்டப் பயணத்தில் தமக்கு உந்துசக்தியாகவும் துணையாகவும் விளங்கும் மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தனது மகள்கள் ஆகியோரின் தியாகங்களை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான முறையில் அன்றாடம் உழைக்கும் மில்லியன் கணக்கான தாய்மார்கள், ஆசிரியர்கள், பெண் தலைவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்கள் தொடர்ந்து மதிக்கப்படுவதையும், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதிச் செய்து அவர்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு