மூவார், ஆகஸ்ட்.04-
தனது டாக்சியில் பயணம் செய்த 16 வயது பெண்ணிடம் ஆபாசச் சேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் 76 வயது டாக்சியோட்டி ஒருவர் ஜோகூர், மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
லோ ஃபாட் தாம் என்ற அந்த டாக்சியோட்டி, நீதிபதி சயானி நோர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மொழிப் பெயர்ப்பாளரின் உதவியுடன் வாசிக்கப்பட்டது.
அந்த டாக்சியோட்டி கடந்த மே 13 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் குளுவாங், ஜாலான் முகமட் சாலிம் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் தனது டாக்சியில் 16 வயது பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த டாக்சியோட்டி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








