கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
கள்ளக் கடத்தல்காரர்களின் செயல்பாடுகளைக் கண்டறிய ஆளில்லா விமானங்களான ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்து மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தப் புதியத் தொழில்நுட்பம், கடற்பரப்பு குற்றங்களைக் கண்காணிப்பதுடன், சட்ட அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் கண்டறிய உதவுகிறது என மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இடைக்கால உதவி இயக்குநர் முகமட் ஸவாவி அப்துல்லா தெரிவித்தார்.
இதனை எதிர்கொள்ள, அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட புதிய கப்பல் உட்பட கூடுதல் கப்பல்களைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே உள்ள கப்பல்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையானது நாட்டின் கடற்பகுதியைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய உத்தி என்று அவர் மேலும் கூறினார்.








