சண்டக்கான், ஜூலை.28-
சபா, சண்டக்கானில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் கட்டடத்திலிருந்து குடும்ப மாது ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
7 ஆவது மாடியிலிருந்து விழுந்த அந்த மாது பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இன்று நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சண்டக்கான் போலீசார் தெரிவித்தனர்.








