Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கூடுதல் விண்ணப்பம்: முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

கூடுதல் விண்ணப்பம்: முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

மங்கோலியா முன்னாள் அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட அரச மலேசிய போலீஸ் படையின் முன்னாள் அதிரடி போலீஸ் பிரிவு அதிகாரி அஸிலா ஹாட்ரி, தனக்கு எதிரான தண்டனைக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனு குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் அழகியின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் மேல் இடத்தில் கிடைக்கப் பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே அல்தான்துயாவைக் கொன்றதாகவும், தமக்கு எதிரான தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, சத்தியப் பிரமாண வாக்குமூலம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த முன்னாள் அதிகாரி, மேலிடம் என்று குறிப்பிட்டு இருப்பது தொடர்பில் அது தொடர்பாக விரிவான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று தனது வழக்கறிஞர் சங்கீட் கவுர் டியோ மூலமாக அல்தான்துயாவின் தந்தை செடெவ் ஷாரிபு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலிடம் என்றால் அது யார் என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செடெவ் ஷாரிபு தனது விண்ணப்பத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News