Jan 18, 2026
Thisaigal NewsYouTube
கட்டாய மரணத் தண்டனையை அகற்றும்  சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

கட்டாய மரணத் தண்டனையை அகற்றும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது

Share:

குற்றவாளிகளுக்குக் கட்டாய மரணத் தண்டனை விதிப்பதை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மரணத் தண்டனைக்குப் பதிலாக கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு, நீதிபதிகளுக்கு இந்தச் சட்டத்திருத்த மசோதா விருப்புரிமையை வழங்குகிறது.
இந்தப் புதிய சட்டத்தின் வழி, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும் 1,318 கைதிகள் மரணத் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இச்சட்டத்திருத்த மசோதா குறித்து மக்களவையில் பேசிய, சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், கடுங்குற்றங்களைப் புரியும் குற்றவாளிகளுக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பது என்பது இனி, நீதிபதிகளின் விவேகத்திற்கு உட்பட்டு முடிவுச் செய்யப்படும் என்றார்.

அதே வேளையில், குற்றவாளிகளுக்குக் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிப்பதற்கு இச்சட்டத்திருத்தம், நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்குவதாக ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!