Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.22-

ஜோகூர் அரச குடும்பம் ஏற்பாடு செய்த ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்வில், சிங்கப்பூரின் இரண்டு அமைச்சர்கள் நேற்று மார்ச் 21 -ஆம் தேதி பங்கேற்றனர். இது ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சியாகும்.

சிங்கப்பூரின் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் Masagos Zulkifli மற்றும் கல்வி அமைச்சர் Desmond Lee ஆகியோர் தங்கள் மனைவிகளுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், ஜோகூர் மாநில பட்டத்து இளவரசர் மற்றும் இடைக்கால சுல்தான் Tunku Ismail Sultan Ibrahim மற்றும் அவரது துணைவியார் Che’ Puan Mahkota Khaleeda Johor அவர்கள் மதிய உணவளித்து வரவேற்றனர்.

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தச் சந்திப்பின் போது சிங்கப்பூர் மற்றும் ஜொகூர் இடையேயான நீண்ட நாள் எல்லைத் தொடர்புகளை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இரு தரப்புகளுக்கிடையேயான பல்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், ஹரி ராயா வாழ்த்துகளையும் ஜோகூர் அரச குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Related News