Sep 24, 2026
Thisaigal NewsYouTube
41 பூனைகளின் இறப்புக்குக் காரணமான பெண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

41 பூனைகளின் இறப்புக்குக் காரணமான பெண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கடந்த மார்ச் மாதம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 36 பூனைகளைப் பட்டினியால் வாடவிட்டதோடு, 41 பூனைகளின் இறப்புக்குக் காரணமானதாகக் கூறப்படும் வழக்கில், பகுதிநேர பெண் நில அளவையாளர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

சுபாங் ஜெயாவை சேர்ந்த 49 வயது லீ ரியோ ஜின் அந்தப் பெண்ணின் வீட்டில் கால்நடை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, , 41 பூனைகளின் உடல்கள் குளிர்சாதனைப் பெட்டிகளிலும், 36 பூனைகள் மெலிந்த நிலையில் கூண்டுகளிலும் கண்டெடுக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண், தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News