கோலாலம்பூர், அக்டோபர்.04-
மலேசியத் தொழிலாளர்களுக்குப் பணி இடத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்புச் சலுகை வழங்குவதற்கு சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் நடப்புச் சட்டம் திருத்தப்படவிருக்கிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
சொக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உத்தேசச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டத்திருத்தம் மிக முக்கியமானதாகும். பணி நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் மலேசியத் தொழிலாளருக்கு பாதுகாப்பு வழங்குவதை இந்தச் சட்டம் உறுதிச் செய்கிறது என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.








