Oct 17, 2026
Thisaigal NewsYouTube

விழா கால உச்சவரம்பு விலை: பெரும்பாலான வியாபாரிகள் பின்பற்றினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விழா கால உச்சவரம்பு விலை: பெரும்பாலான வியாபாரிகள் பின்பற்றினர்

கோலாலம்பூர், நவ.9-


இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட விழாக்கால உச்சவரம்பு விலைத் திட்டம் , சுமூகமாக அமல்படுத்தப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.

அதுமட்டுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்ட உச்சவரம்பு விலைத் திட்டம் மீதான வழிகாட்டுதல்களைப் பெரும்பாலான வர்த்தகர்கள் பின்பற்றினர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் 61 தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை வளாகங்கள் மற்றும் 3,826 சில்லறை விற்பனை நிலையங்களை உட்படுத்திய . 3,887 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →