Sep 29, 2026
Thisaigal NewsYouTube
முதல் ஐந்து மாதங்களில் மலேசியாவில் 388 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்
தற்போதைய செய்திகள்

முதல் ஐந்து மாதங்களில் மலேசியாவில் 388 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்

Share:

இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் நாட்டில் 388 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துணையமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

இதில் பினாங்கில் மட்டும் 29 வழக்குகள் பதிவாகியுள்ளன. போலீஸ் துறையில் பதிவான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2022-ஆம் ஆண்டு 477-ஆக இருந்த நிலையில், 2023-ல் 522-ஆகவும், 2024-ல் 788-ஆகவும், கடந்த ஆண்டு 1,038-ஆகவும் அதிகரித்துள்ளன.

இந்த அதிகரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை மட்டுமே குறிக்காது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் உதவி நாடுவதற்கான விழிப்புணர்வும் துணிச்சலும் அதிகரித்திருப்பதைக் காட்டக்கூடும் என்றும் லிம் ஹுய் யிங் கூறினார்.

2022-ஆம் ஆண்டின் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் தீர்ப்பாயத்தில், செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 142 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 97 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது ஆலோசகர்களிடம் தயக்கமின்றி உதவி கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News