Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

கோலாலம்பூர், ஜூன்.20-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட சட்டவிரோதப் பண மாற்றம் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்த போதிலும், அவர் காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஜீப், அந்தத் தண்டனையை நிறைவேற்றியாக வேண்டும். அதுமட்டுமின்றி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடு தொடர்புடைய 7 குற்றச்சாட்டுகள் மீதான வழக்கையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.

இவையனைத்தையும் நஜீப் தொடர்ந்து எதிர்கொள்ளும் வகையில் காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று விளக்கம் அளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →