Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய செய்திகள்

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்

Share:

நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அம்னோவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை கிடைத்தப்பின்னர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் மலாக்கா, ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஜைலானி காமிஸ் கலந்து கொண்டது அம்னோ வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related News