Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இரு மகள்களிடம் பாலியல் வல்லுறவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரு மகள்களிடம் பாலியல் வல்லுறவு

அலோர் கஜா ,ஆகஸ்ட் 30-

தனது இரு மகள்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களில் ஒருவரை பாலியல் அடிமையாக வைத்திருந்ததாக நம்பப்படும் பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

13 மற்றும் 17 வயதுடைய இரு மகள்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை தொடர்பில் 39 வயதுடைய அந்த பாதுகாவலர், இன்று காலையில் மலாக்கா, அலோர் கஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீஸ் துறைக்கு மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு யீ அனுமதி அளித்தார்.

மலாக்கா, துரியன் துங்கல் -லில் உள்ள ஒரு வீட்டில் தனது இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு சொந்த மகள்களையே கட்டாயத்தின் பேரில் செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்ததாக அந்த நபருக்கு எதிராக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இரு மகள்களிடம் பாலியல் வல்லுறவு | Thisaigal News