Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லைகள், ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லைகள், ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

நாட்டில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஓரிட சமூகவியல் ஆதரவு மையத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

மகளிர், குடும்ப, சமூக மேம்பட்டுத்துறை அமைச்சின் ப்ரோக்ரேம் Jerayawara kasih KPWKM@Advokasi Antigangguan Seksual எனும் தலைப்பில் நடத்தப்பட்ட 14 தொடர் நிகழ்வுகளில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுகின்றவர்கள் தங்களின் உள்ளக் முறலை வெளியிட்டது தொடர்பில் 1,486 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் ஐமன் அத்திரா சாபு தெரிவித்துள்ளார்.

இந்த மொத்த புகார்களில் 411 புகார்கள் அல்லது 27.7 விழுக்காடு ஆண்கள் சம்பந்தப்பட்டதாகும் என்று இன்று நாடாளுமன்ற மேலலைவியல் பேசுகையில் துணை அமைச்சர் ஐமன் அத்திரா சாபு இதனை குறிப்பிட்டார்.

இதேபோன்று கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடத்தப்பட்ட மற்றொரு 12 தொடர்பு நிகழ்வுகளில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக மொத்தம் 1,213 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் 351 பேர் அல்லது 28.9 விழுக்காட்டுப் புகார்கள் ஆண்களிடமிருந்து கிடைக்கப் பெற்றவையாகும் என்று ஐமன் அத்திரா சாபு குறிப்பிட்டார்.

Related News